விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு ஏன்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு ஏன்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:56 AM GMT (Updated: 2021-09-09T14:26:03+05:30)

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,

மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், கூட்டமாக சேர்ந்து கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என நாங்கள் கூறவில்லை என்றார்.

Next Story