"கோடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை"...விசாரணை நடத்துவதில் தவறில்லை" - சரத்குமார் பேட்டி


கோடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை...விசாரணை நடத்துவதில் தவறில்லை - சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 9 Sep 2021 3:47 PM GMT (Updated: 2021-09-09T21:17:14+05:30)

கோடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை என்றும் விசாரணை நடத்துவதில் தவறில்லை என ச.ம.க தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

திண்டுக்கல்,

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அசம்பாவிதங்கள் நடந்திருப்பது உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. கோடநாடு வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படும் என்பதற்கு ஏன் பயப்படவேண்டும். நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியதுதான்.

இந்த வழக்கில் குற்றம் புரிந்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். எனவே இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதில் தவறில்லை என நினைக்கிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பற்றிய விசாரணை குறித்து முதல்-அமைச்சர் தான் பதில் சொல்லவேண்டும். 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவு செய்யப்படும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story