மாநில செய்திகள்

கொரோனாவுக்கு 82 பேர் பாதிப்பு + "||" + 82 people were affected by the corona

கொரோனாவுக்கு 82 பேர் பாதிப்பு

கொரோனாவுக்கு 82 பேர் பாதிப்பு
புதுவையில் கொரோனாவுக்கு 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் கொரோனாவுக்கு 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பரிசோதனை 
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 175 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 818 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 74 பேர் குணமடைந்தனர்.
மூதாட்டி பலி
அதேநேரத்தில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 77 வயது மூதாட்டி பலியானார். இவரை சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,820 ஆக உயர்ந்துள்ளது. 
புதுவையில் கொரோனா பாதிப்பு 1.53 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 1,123 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 49 ஆயிரத்து 360 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.