வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள்


வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:22 PM GMT (Updated: 2021-09-10T01:52:10+05:30)

வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் அண்ணாமலை அறிவிப்பு.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் விநாயகரை மனதார நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும். ஆகையினாலேயே எழுத தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டுத்தொடங்குகிறோம்.

பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் திரு அகவல் பாடி வழிபட இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலில் உங்கள் கோலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து வழிபடுங்கள்.

மற்ற மதத்தினரையும் உங்கள் வழிபாட்டிற்கு அழையுங்கள். மரியாதையுடன் அவர்களுக்கும் நம் மனக்காயங்களை சொல்லுங்கள். விநாயகர் சிலைகளை மரபுப்படி நீங்களே சென்று நீர்நிலைகளில் கரையுங்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story