மாநில செய்திகள்

நலிவடைந்த மக்களை மேம்படுத்தவே வரிவிலக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு + "||" + The tax exemption judgment is to uplift the vulnerable people

நலிவடைந்த மக்களை மேம்படுத்தவே வரிவிலக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு

நலிவடைந்த மக்களை மேம்படுத்தவே வரிவிலக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு
நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,

இசை கருவிகளை தயாரிக்கும் தனியார் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசாணைப்படி, தங்கள் நிறுவனம் தயாரிக்கும் இசை கருவிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரி விலக்கு அளிக்க மறுத்த வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தது.


இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜராகி வக்கீல், ‘‘இந்திய இசைக்கருவிகளுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கிறது. ஆனால், மின்னணு முறையில் உற்பத்தியாகும் மனுதாரர் நிறுவன இசைக்கருவிகளுக்க்கு வரிவிலக்கு வழங்க மறுக்க முடியாது’’ என்று வாதிட்டார்.

ஊக்குவிப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அரசு வக்கீல் நன்மாறன், ‘‘தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளை தயாரிக்கின்ற, ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகத்தான் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. மின்னணு முறையில் இயங்குகின்ற இசைக்கருவிகளுக்கு இந்த சலுகை வழங்க முடியாது’’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தில் வீணை, வயலின், கடம், மிருதங்கம், தவில், மகுடி, பஞ்சலோக வாத்தியம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை விற்பனை செய்யும்போது வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உரிமை இல்லை

வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே. விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் அந்த சலுகையை உரிமையாக கோர முடியாது. வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால், பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்து விடும். விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களையும், நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திட கூடாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய மனு தள்ளுபடி
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
2. நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தவில்லை என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தவில்லை என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
4. ஐகோர்ட்டுகளில் 90 சதவீத காலி பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
ஐகோர்ட்டுகளில் உள்ள 90 சதவீத காலி பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
5. இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.