மாநில செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை + "||" + Today in Chennai Petrol, diesel price unchanged

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. அக்.20: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
3. அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
4. எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு; பிரியங்கா காந்தி
பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
5. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.