சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கும் போது தீவிபத்து


சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கும் போது தீவிபத்து
x
தினத்தந்தி 10 Sep 2021 4:53 AM GMT (Updated: 2021-09-10T10:37:07+05:30)

தீவிபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 6க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது தாயில்பட்டி. இங்கு எஸ்பிஎம் தெருவில் ஒரு வீட்டில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. அதில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது திடீர் என பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இந்த  இடிபாடுகளுக்குள் 6 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு  படையினர் சென்று  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story