வாகனங்களில் தலைவர்கள் படத்தை நீக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வாகனங்களில் தலைவர்கள் படத்தை நீக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:20 AM GMT (Updated: 2021-09-10T11:00:39+05:30)

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்டஹ் பொது நல வழக்கில் வாகனங்களில் தலைவர்கள் படத்தை நீக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்  மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் 

வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அதுபோன்று இருக்க கூடாது, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இருக்க கூடாது.

அனைவரும் எளிதில் காணும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கண்டுகொள்வது இல்லை. இதற்கு  தகுந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

வாகனங்களில் வாகனத்தில் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்படும் தலைவர்களின் புகைப்படத்தை 60 நாட்களுக்குள் நீக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அரசியல் கட்சிக்கொடி, கட்சி தலைவர்களின் படம் போன்றவைகள் தேர்தல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம் 

வாகனத்தில் தடை செய்யப்பட்டுள்ள கண்ணாடிகள் மற்றும் விதியை மீறி உள்ள நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கிறோம். 60 நாட்களுக்கு மேல் இந்த உத்தரவுகள் மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில், வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனத்தை பறித்தல் செய்ய வேண்டும் " என்று கூறினர்.Next Story