பிளஸ்1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது


பிளஸ்1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 4:59 PM GMT (Updated: 2021-09-10T22:29:36+05:30)

பிளஸ்1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 21). கார் டிரைவர். இவருக்கும், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாமோதரன், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த மாணவியுடன், தாமோதரன் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story