மாநில செய்திகள்

புதிதாக 111 பேருக்கு கொரோனா + "||" + Corona for 111 newcomers

புதிதாக 111 பேருக்கு கொரோனா

புதிதாக 111 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மேலும் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
111 பேருக்கு கொரோனா
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
அதாவது புதுச்சேரியில் 71 பேரும், காரைக்காலில் 30 பேரும், மாகியில் 8 பேரும், ஏனாமில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
தடுப்பூசி
புதுவையில் இதுவரை 1,820 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு 1.90 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 934 பேரும் தடுப்பூசி செலுத்திகொண்டனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 52 ஆயிரத்து 493 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.