மாநில செய்திகள்

விமானங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி வழக்கு + "||" + Case seeking to declare precautionary notices in aircraft in state languages

விமானங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி வழக்கு

விமானங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி வழக்கு
விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோந்தவா் வழக்குரைஞா் பி.ராம்குமாா் ஆதித்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது; ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சு திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக்கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீா் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யேக ஆடைகள் இருக்கும் இடம், அவற்றைஅணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் அறிவிப்பு மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்படும். 

ஆனால், தற்போது அறிவிக்கப்படும், வழங்கப்படும் அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவீத மக்கள் ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவா்கள். அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும். 
இந்திய ரெயில்வேயில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநிலத்தின் உள்ளூா் மொழியில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. எனவே உள்நாட்டு விமானங்களில் விமானம் புறப்படும், விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன்பு வருகிற திங்கள்கிழமை (செப்டம்பர் 13ந்தேதி) விசாரணைக்கு வரவுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
2. சென்னையில் முககவசம் அணியாத 1,163 பேர் மீது வழக்கு
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3. தோழியை கொன்ற வழக்கு: அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் குற்றவாளியாக அறிவிப்பு
அமெரிக்காவில் கோடீஸ்வர ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், தனது தோழியை கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
5. மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு.