பாரதியார் உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


பாரதியார் உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 11 Sep 2021 5:22 AM GMT (Updated: 11 Sep 2021 5:22 AM GMT)

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  பாரதியாரின் நுற்றாண்டு நினைவு நாளையொட்டி  சென்னை, மெரினாவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார். 


Next Story