சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது
x
தினத்தந்தி 11 Sep 2021 6:04 AM GMT (Updated: 2021-09-11T11:34:57+05:30)

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35,520-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Next Story