கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முப்பெரும் விழா


கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 11 Sep 2021 1:53 PM GMT (Updated: 2021-09-11T19:23:25+05:30)

கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி
கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முப்பெரும் விழா

பாரதியாரின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில்  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதியார் 10 ஆண்டுகள் புதுவையில் வசித்துள்ளார். பாரதியாரின் நூற்றாண்டு, வ.உ.சி.யின் 150-வது ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆண்டு முழுவதும்...

பாரதியாரின் நூற்றாண்டு விழா என்பதால் இளைஞர்கள், கவிஞர்கள், தேசபக்தர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாரதியார் நாட்டுப்பற்றை மட்டுமல்லாது ஆன்மிகத்தையும் புதுவையில் விதைத்துள்ளார்.
பகவத்கீதையை அவர் புதுவையில் வசிக்கும்போது தான் மொழி பெயர்த்தார். இவை அனைத்தையும் மக்களிடம் எடுத்து செல்லும் அளவுக்கு அரசின் நடவடிக்கைகள் இருக்கும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Next Story