காரைக்காலில் சிறுமிக்கு திருமணம் மணமகன் உள்பட 9 பேர் மீது வழக்கு


காரைக்காலில் சிறுமிக்கு திருமணம் மணமகன் உள்பட 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Sep 2021 2:08 PM GMT (Updated: 2021-09-11T19:38:09+05:30)

காரைக்காலில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக மணமகன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

காரைக்கால்
காரைக்காலில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக மணமகன் உள்பட 9 பேர்  மீது போலீசார்     வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுமிக்கு திருமணம்

காரைக்காலை அடுத்த நிரவியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 21). இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் கோட்டுச்சேரியில் உள்ள ஒரு கோவிலில்  திருமணம் நடப்பதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர், அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த மணமக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் மணப்பெண்ணின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அவருக்கு   15  வயதே  நிரம்பி இருப்பது தெரியவந்தது.

9 பேர் மீது வழக்கு

திருமண    வயதை  எட்டு வதற்கு முன்பே சிறுமியை வாலிபருக்கு திருமணம் செய்து    வைத்தது  தெரிய வந்தது. இதுதொடர்பாக கோட்டுச்சேரி போலீசில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். 
அதன்பேரில்   சிறுமியின் பெற்றோர், மணமகன் பாலமுருகன், கோவில் அறங்காவல் நிர்வாகி கண்ணன், கோவில் பூசாரி சுப்பிரமணியன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியை மீட்டு காப்பகம் மூலம் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story