முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:59 PM GMT (Updated: 11 Sep 2021 9:59 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2 ஆயிரத்து 207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை ஆன்லைன் போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால் 40 வயதை கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட போது, அதை தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக எதிர்த்தார். ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் 12-ம் எண் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்த வகையில் இந்த சிக்கலின் தீவிரம் அவருக்கு தெரியும் என்பதால் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும். ஓராண்டு பணி செய்யும் தகுதியுடைய அனைவரும் ஆசிரியர் பணி போட்டி தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story