மாநில செய்திகள்

மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு + "||" + We will not force people to unite areas they do not want to join the corporation: Minister KN Nehru

மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு

மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி அதற்கான தேதியை நாளை (திங்கட்கிழமை) அறிவிப்பார். தமிழகத்தில் 30 நகராட்சியும், 6 மாநகராட்சியும் அதிகரித்துள்ளன. வார்டு மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு ஒத்துக்கொள்ளப்பட்டு கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்கள். ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க விருப்பம் இல்லை என்றால், கட்டாயப்படுத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா, மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கனமழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகராட்சி பகுதியில் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
3. ‘சென்னையில் கனமழையை எதிர்கொள்ள தயார்’ - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
சென்னையில் 24 மணிநேரமும் அவசர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
4. கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5. காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள்
காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.