பாரதியார்-இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்; சீமான் மலர்தூவி அஞ்சலி


பாரதியார்-இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்; சீமான் மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 11 Sep 2021 11:35 PM GMT (Updated: 11 Sep 2021 11:35 PM GMT)

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாரதியாரின் 100-ம் ஆண்டு நினைவுநாள் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் 64-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று காலை சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
பெண்களை வன்புணர்வு கொலை செய்பவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அது எங்களின் கோட்பாடு. போலீசாருக்கு 8 மணி நேர பணி என்ற விவகாரத்தில் நீதிமன்றமும் நாம் சொல்வதை கேட்கிறது. இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு தினமாக அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.நடிகர் விவேக் இடத்தையும், நடிகர் வடிவேலு இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. வடிவேலுவை போன்று இன்னொரு கலைஞர் இனிமேல் பிறந்துதான் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story