மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் + "||" + 1.33 crore smuggled gold seized at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு, அதிகாலை 2:30 மணிக்கு வந்த 34 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி மற்றும் காலை 4 மணிக்கு வந்த 35 வயது ஆண் பயணி ஆகியோா் விமான நிலைய வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவா்களது உடைமைகளை சோதனையிட்டபோது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ.1.33 கோடி மதிப்பில் 3,125 கிராம் எடையில் 11 தங்க கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், 2 பயணிகளையும் கைது செய்து, தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 20 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ‘ஏர்ஹாரன்கள்’ பறிமுதல்
பரமக்குடி அருகே 20 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; டிரைவருக்கு வலைவீச்சு
சிவகிரி பகுதியில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்துவந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது...!
கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. பொதுமேலாளர் அலுவலகம், வீடுகளில் 9 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகம், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர், இதில் கணக்கில் வராத 9 லட்சம் ரொக்கம் ரூ.1 கோடி ஆவணங்கள், 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. திருச்சுழி அருகே வாகன சோதனை: கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்த 36 பசுக்கள் பறிமுதல்
கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்த 36 பசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.