மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை + "||" + Student who was preparing for NEET exam commits suicide

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
நாடு முழுவதும் இன்று மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசிலாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.

இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், இன்று 3-வது முறையாக தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்தார். இதற்காக அவர் தீவிரமாக தயாராகி வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு 1 மணி வரை மாணவர் தனுஷ் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால், தனுஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் - கமல்ஹாசன் அறிக்கை
சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் வேலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. தொடரும் தற்கொலைகள்: மாணவர்களின் மனநிலையை அறிய முயற்சி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்வு எழுதிய மாணவர்களிடம் பேசத் தொடங்கியுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
4. மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையில் ஆலோசனை - மா.சுப்ரமணியன்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆலோசனை மையங்கள் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
5. ராஜஸ்தானில் நீட் தேர்வில் முறைகேடு; 8 பேர் கைது
ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.