புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை


புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை
x
தினத்தந்தி 12 Sep 2021 6:50 AM GMT (Updated: 2021-09-12T12:20:14+05:30)

புனேவில் இருந்து கூடுதலாக 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை தமிழக அரசு பெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் மாத ஒதுக்கீடாக 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இதுவரை 54 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று புனேவில் இருந்து மேலும் 13 லட்சத்து 53 ஆயிரம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதோடு சேர்த்து தமிழகம் இதுவரை 3 கோடியே 81 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுள்ள நிலையில், நேற்று வரை 3 கோடியே 51 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

Next Story