“அநீதியான தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்” - கமல்ஹாசன்


“அநீதியான தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்” - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 12 Sep 2021 7:40 AM GMT (Updated: 2021-09-12T13:10:20+05:30)

ஓர் அநீதியான தேர்வை 1.10 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இந்த தேர்வை சந்திக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் இன்று நீட் தேர்வு எழுத உள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?” என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story