நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது


நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 12 Sep 2021 8:41 AM GMT (Updated: 2021-09-12T14:11:24+05:30)

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில்  உள்ள 24 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.

 தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்படுகிறது. 

 தமிழ், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. புதுச்சேரியில் 14 மையங்களில் 7,123  மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.10 லட்சம் பேர் எழுதுகின்றனர். 


Next Story