மாநில செய்திகள்

புதுவை கடற்கரையில் வெங்கையா நாயுடு நடைபயிற்சி + "||" + Venkaiah Naidu took a walk on the beach in Puthuvai.

புதுவை கடற்கரையில் வெங்கையா நாயுடு நடைபயிற்சி

புதுவை கடற்கரையில் வெங்கையா நாயுடு நடைபயிற்சி
புதுவை கடற்கரையில் வெங்கையா நாயுடு நடைபயிற்சி மேற்கொண்டார்.
புதுச்சேரி
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாட்கள் (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) அரசு முறை சுற்றுப்பயணம் வர திட்டமிடப்பட்டது. அதன்படி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று புதுவை வந்தார். அவர், ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் பாரதியார் நினைவு இல்லம், அரவிந்தர் ஆசிரமம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
நேற்று மாலை புதுவை கடற்கரையில் வெங்கையா நாயுடு நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர், கடற்கரையின் அழகை பார்த்து ரசித்தார். மேலும் அவர் கடற்கரையோரம் உள்ள இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு வெடுத்தார். பின்னர் மீண்டும் நீதிபதிகள் தங்குமிடத்துக்கு சென்று ஓய்வெடுத்தார்.
இந்தநிலையில் துணை ஜனாதிபதியின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) புதுவை என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் வெங்கையாநாயுடு பங்கேற்று சிறப்புரை ஆற்றுக்கிறார். அதன்பிறகு நேராக கார் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று பகல் 11.45 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
---- ----