1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்


1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
x
தினத்தந்தி 12 Sep 2021 6:44 PM GMT (Updated: 12 Sep 2021 6:44 PM GMT)

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அரசிடம் 15-ந்தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார். திருச்சி திருெவறும்பூரில் நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி, 

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது இது தனது அரசு அல்ல, மக்களுக்கான அரசு என்று கூறியுள்ளார். `நீட்' தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். `நீட்' தேர்வுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்ததாவது:-

இன்று(நேற்று) தமிழகத்தில் `நீட்' தேர்வு நடைபெற்றது. இது, தமிழகத்தில் கடைசி தேர்வாக இருக்குமா?

`நீட்' தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. `நீட்' தேர்வை நீக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது எப்போது?

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 15-ந் தேதி(புதன்கிழமை) அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story