மாநில செய்திகள்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் + "||" + Suicide Prevention Awareness Day

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம்
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம்
தென்காசி:
நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வாசகப்போட்டி நடைபெற்றது.
 போட்டியில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், டாக்டர் விஜயகுமார், ஓவிய ஆசிரியர் ராஜு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.