9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்


9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 13 Sep 2021 6:10 AM GMT (Updated: 13 Sep 2021 6:10 AM GMT)

சமீபத்தில் கூட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

சென்னை,

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை  5 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்த தேதி வெளியாகும் என்று தெரிகிறது. தமிழகத்தை பொருத்தவரை 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.  

தொடர்ந்து விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை  தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, வாக்குச்சாவடி போன்ற பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியிருக்கிறது. 

சமீபத்தில் கூட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளும் நடத்தப்பட்டது. இந்த நிலையில்  தான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story