மாநில செய்திகள்

டெல்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று + "||" + Delhi reports 17 new cases, 30 recoveries and zero deaths; active cases 377, positivity rate 0.04%

டெல்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று

டெல்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று
டெல்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40,399 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 17 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 30 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோய்த் தொற்றால் ஒருவர் கூட கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,250 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,12,790 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,083 ஆகவே நீடிக்கிறது.

இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 377 ஆக உள்ளது.