மாநில செய்திகள்

புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் + "||" + The No. 1 storm warning cage has been installed at the Puducherry port.

புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரி, 
வங்கக்கடல் பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான், ஒடிசா கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.