மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Tamil Nadu, 1,580 people were diagnosed with corona infection in a single day

தமிழகத்தில் ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,608இல் இருந்து 1,580 ஆக குறைந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,53,584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,580 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

12 வயதிற்குட்பட்ட 88 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 110 சிறுவர்களுக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் இன்று 88 ஆக குறைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,509 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,83,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

கொரோனாவால் மேலும் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,190 ஆக உயர்ந்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். 

ஈரோட்டில் 120 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 137 ஆக குறைந்துள்ளது.  கோவையில் 212 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 204 ஆக குறைந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,522 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.