எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு; முதல்-அமைச்சர் அறிவிப்பு


எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு; முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 7:02 PM GMT (Updated: 13 Sep 2021 7:02 PM GMT)

எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.



சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த சட்ட முன்வடிவில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் (எடப்பாடி பழனிசாமி) சட்டமன்றத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, எம்.எல்.ஏ. பதவி காலத்தில் இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் படித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும். இறந்துவிட்ட எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500ஆக அதிகரிக்கப்படும் என்றும் இது ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அரசு ஏ.சி. பேருந்தில் வாழ்க்கை துணை அல்லது உடனிருப்பவருடன் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்ட முன்வடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story