மாநில செய்திகள்

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு + "||" + Publication of Ranking List for Engineering Student Admission

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
சென்னை,

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் எனப்படும் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்-ஆஃப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; ஆன்லைனில் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ரகுபதி தகவல்
சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 26-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
2. கொரோனா தாக்கம் எதிரொலி: மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு பள்ளிகள்...
மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகள் அசத்தி வருகின்றன.
3. புதுக்கோட்டையில் மாணவர் சேர்க்கைக்காக அவ்வை வேடத்தில் வந்த ஆசிரியை
புதுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அவ்வை வேடம் அணிந்து ஆசிரியை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
4. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
5. எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-