மாநில செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் + "||" + Chance of heavy rain in the Nilgiris district Meteorological Center information

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென் மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும், உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
3. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள், படகு இல்லங்கள் இன்று திறப்பு
நீலகிரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தோட்டக்கலை பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
5. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.