மாநில செய்திகள்

மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண் + "||" + 6 persons surrender in Tanjore court in MJK Pramukar murder case

மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்

மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தஞ்சாவூர், 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(42). மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த இவர், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். சம்பவம் நடந்த இரவு, ஜீவா நகர் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு அவ் வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதன்படி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்திய சீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டநிலையில் தற்போது மேலும் 6 பேர் தஞ்சை நீதிமன்ற நீதிபதி பாரதி முன் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
2. சிங்கு எல்லை நடந்த கொலை: 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைப்பு
சிங்கு எல்லையில் நடந்த கொலையில் விசாரணை நடத்துவதற்கு 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
3. முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டார்
முந்திரி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
4. பண்ருட்டி முந்திரி தொழிலாளி கொலை: கடலூர் தி.மு.க. எம்.பி.யின் உதவியாளர் உள்பட 5 பேர் கைது
பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தி.மு.க. எம்.பி.யின் உதவியாளர் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
5. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.