மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 9:44 AM GMT (Updated: 14 Sep 2021 9:44 AM GMT)

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு வரும்  அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில்,  மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "2021 அக்.4 அன்று, நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.


Next Story