மாநில செய்திகள்

புதிதாக 103 பேருக்கு கொரோனா + "||" + The corona experiment was carried out in Puduvai. 103 of them were confirmed infected.

புதிதாக 103 பேருக்கு கொரோனா

புதிதாக 103 பேருக்கு கொரோனா
புதுவையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 103 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுச்சேரி
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 103 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 167 பேரும், வீடுகளில் 691 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 105 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.85 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 5 பேரும் பொதுமக்கள் 2 ஆயிரத்து 39 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 79 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.