மாநில செய்திகள்

திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona damage to 3 guards in Trichy; The police station was closed

திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக, மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதேபோல், கேரளா மற்றும் தமிழகம் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் 30 பேர் பணியாற்றி வரும் நிலையில் அனைவரும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதனை அடுத்து, காவல் நிலையத்திற்கு முன்பாக வெளிநபர்கள் வராத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 167 ஆக உயர்ந்து உள்ளது.
2. தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு; 1,245 பேருக்கு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,245 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 163 ஆக குறைந்து உள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா குறைவு; 1,259 பேருக்கு பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 1,259 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.