முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்க ‘பேடிஎம் மணி வெல்த்பேஸ்கட்ஸ்' - ‘பேடிஎம்' நிறுவனம் அறிவிப்பு


முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்க ‘பேடிஎம் மணி வெல்த்பேஸ்கட்ஸ் - ‘பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 10:35 PM GMT (Updated: 14 Sep 2021 10:35 PM GMT)

முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்க ‘பேடிஎம் மணி வெல்த்பேஸ்கட்ஸ்' தளத்தை ‘பேடிஎம்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கான இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சூழல் அமைப்பான ‘பேடிஎம்' தனக்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமான ‘பேடிஎம் மணி' அதன் தளத்தில் ஒரு வளம் மற்றும் முதலீட்டு ஆலோசனை சந்தையை உருவாக்குவதை வெளிப்படுத்தி உள்ளது.

சில்லரை முதலீட்டாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசனை சேவைகள் மற்றும் தயாரிப்புகள் வளத்தை உருவாக்குவதை ஜனநாயகமாக்குவதற்கான முதல் படியாக, ‘பேடிஎம் மணி வெல்த்பேஸ்கட்ஸ்' எனப்படும் முதலீட்டு வழங்குபட்டியலை வழங்குவதற்காக புதுமையான முதலீட்டு சந்தையிடமான ‘வெல்த்டெஸ்க்' உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

‘பேடிஎம்' பயன்பாட்டில் கிடைக்கும் ‘வெல்த்பேஸ்கட்' ‘செபி'யில் (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) பதிவு செய்யப்பட்ட முதலீட்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட பங்குகள், இ.டி.எப்.களின் தனிப்பயனாக்கப்பட்ட வழங்குபட்டியலாகும். மேலும் இது பல வருட ஆராய்ச்சி மற்றும் பின்சோதனைகளின் மூலம் ஆதரிக்கப்படுகிறது. பயனர்கள் தொடர்புக்கொள்ளக்கூடிய சில கருப்பொருள்களை சுற்றி இந்த வழங்குபட்டியல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

உதாரணமாக இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நீண்டகால வாய்ப்புகளை நம்பும் முதலீட்டாளர்கள், ‘மேக் இன் இந்தியா' ‘வெல்த்பேஸ்கட்டில்' முதலீடு செய்யலாம். இதில் இந்த கருப்பொருளில் இந்து நன்மை பயக்கும் பங்குகள் இருக்கும். பயனர்கள் இலவச 'ஸ்டார்டர் பேக்' அல்லது கிடைக்கும் பிரீமியம் மாதாந்திர பேக்குகளுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் பல ‘வெல்த்பேஸ்கெட்களில்' முதலீடு செய்யலாம்.

இதுகுறித்து ‘பேடிஎம் மணி'யின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் ஸ்ரீதர் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் தளத்தில் ஜென்-இசட் மற்றும் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களால் முதலீட்டு நடவடிக்கைகளில் அதிகரிப்பு காணப்படுகிறது” என்றார்.

‘வெல்த்டெஸ்' நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உஜ்வால் ஜெயின் கூறும்போது, “ ‘பேடிஎம் மணி' உடனான எங்கள் கூட்டாண்மை ‘வெல்த்பாஸ்கெட்' அடிப்படையிலான பிளாட் சந்தா கட்டணம் மூலம் தரகை கடந்த செல்வதை உருவாக்குவதை ஜனநாயகப்படுத்துவதற்கான எங்கள் பார்வைக்கு ஒத்துப்போகிறது” என்றார்.

Next Story