மாநில செய்திகள்

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட் + "||" + We will break down barriers and shout for the progress of Tamil Nadu Tweets MK Stalin on Birth Annivesary of CN Annadurai

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட்

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட்
'இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி' என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!’ என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அண்ணாசாலை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கனமழையால் பாதிக்கப்பட்ட: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
2. 12,959 கோவில்களில் ஒரு கால பூஜைக்காக ரூ.129½ கோடி முதலீடு - மு.க.ஸ்டாலின் காசோலை வழங்கினார்
12,959 கோவில்களில் ஒரு கால பூஜை செய்ய ஏதுவாக மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.129 கோடியே 59 லட்சம் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
3. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
4. கனமழையால் பாதிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
5. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு என்றும், யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.