மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையில் ஆலோசனை - மா.சுப்ரமணியன்


மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையில் ஆலோசனை - மா.சுப்ரமணியன்
x
தினத்தந்தி 15 Sep 2021 6:43 AM GMT (Updated: 15 Sep 2021 6:43 AM GMT)

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆலோசனை மையங்கள் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். தோல்வி பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தொலைபேசி மூலம் உளவியல் ரீதியிலான கவுன்சிலிங் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.   

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

* நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறியும் முயற்சியாகவே கவுன்சிலிங் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

* மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தல்

* மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையில் இந்த ஆலோசனை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

நீட் தேர்வு எழுதிய மாணவ/மாணவிகள் கவுன்சிலிங் பெற ’104’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Next Story