புதுவையில் தொழில் தொடங்க முதலீடு ஆஸ்திரேலிய துணை தூதர் உறுதி


புதுவையில் தொழில் தொடங்க முதலீடு ஆஸ்திரேலிய துணை தூதர் உறுதி
x
தினத்தந்தி 15 Sep 2021 1:41 PM GMT (Updated: 15 Sep 2021 1:41 PM GMT)

புதுவையில் தொழில் தொடங்க முதலீடு செய்ய உதவுவதாக என்று ஆஸ்திரேலிய துணைத்தூதர் சாரா கிர்லே கூறினார்.

புதுச்சேரி, 
புதுவையில் தொழில் தொடங்க முதலீடு செய்ய உதவுவதாக என்று ஆஸ்திரேலிய துணைத்தூதர் சாரா கிர்லே கூறினார்.

கலாசார பரிவர்த்தனை

தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய துணைத்தூதர் சாரா கிர்லே  புதுச்சேரி வந்தார். அவர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு, கொரோனா மேலாண்மை, கல்வி மற்றும் ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகள், கலாசார பரிவர்த்தனை, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது.

தொழில் முதலீடு

புதுவையில் தொழில் தொடங்க முதலீடு, சுற்றுலா, கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை ஆஸ்திரேலியா செய்யும் என்று துணைத்தூதர் உறுதியளித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களை யொட்டி ஆஸ்திரேலியாவில் கலாசார சந்திப்புகள் நடத்த புதுச்சேரி அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று துணைத்தூதர் சாரா கிர்லே கேட்டுக்கொண்டார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியையும் சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சாரா கிர்லே சந்தித்து பேசினார்.

Next Story