மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு + "||" + TN Covid 19 updates on sep 15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,591 ஆக பதிவான நிலையில் இன்று 1658- ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்தூறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  26 லட்சத்து 38 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,542-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 50 ஆயிரத்து 740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,636- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உள் அரங்குகளில் கொரோனா பரவலை தடுக்க 6 அடி சமூக இடைவெளி போதாது: புதிய ஆய்வு
உள்புறங்களில் காற்றின் வழியே பரவும் திரவ துளிகளிலிருந்து வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூரம் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போதாது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681- பேருக்கு கொரோனா
கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987- ஆக உயர்ந்துள்ளது.
3. திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,530-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லி மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.