மாநில செய்திகள்

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம் + "||" + Three persons from Tamil Nadu have been appointed as trustees of Thirumalai-Tirupati Devasthanam

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை நியமனம் செய்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். அத்துடன் 21 புதிய உறுப்பினர்கள் மற்றும் 3 அலுவல் சார் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவர் என்.சீனிவாசன், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் என்.கண்ணைய்யா மற்றும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை ஆந்திர மாநில அரசின் வருவாய் மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருமலையில் பக்தர்கள் ஓய்வறை பெற 6 இடங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள்
திருமலையில் பக்தர்கள் ஓய்வறை பெற 6 இடங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2. கொரோனா பரவல் எதிரொலி; திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக குறைக்க ஆலோசனை
கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.