மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது


மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 15 Sep 2021 7:10 PM GMT (Updated: 15 Sep 2021 7:10 PM GMT)

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது சுயேச்சை வேட்பாளர் மனு.

சென்னை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் தமிழகத்தில் 2 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாகவுள்ளன. இந்த பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர் ) 4-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. சார்பில் டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் வேட்புமனுவை சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைச் சேர்ந்த பத்மராஜன், நேற்று சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 22-ந் தேதியாகும். வேட்புமனுவை திரும்பப்பெறும் நாள் 27-ந் தேதியாகும். 2 காலியிடங்களுக்கும் போட்டி இல்லாத பட்சத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படாமல் 27-ந் தேதியன்றே முடிவு அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story