பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்
x
தினத்தந்தி 15 Sep 2021 8:11 PM GMT (Updated: 15 Sep 2021 8:11 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர் விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.

விழுப்புரம்,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர். அப்போது சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல், இவ்வழக்கை விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, எனவே இங்கு வழக்கை விசாரிக்கக்கூடாது என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கிட்டு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கை விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரமும் இருக்கிறது என்று வாதிட்டார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Next Story