கோவையில் 46 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா கல்லூரி மூடப்பட்டது


கோவையில் 46 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா கல்லூரி மூடப்பட்டது
x
தினத்தந்தி 15 Sep 2021 8:20 PM GMT (Updated: 15 Sep 2021 8:20 PM GMT)

கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 46 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மூடப்பட்டது.

கோவை,

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.நர்சிங் கல்லூரியில் கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் நர்சிங் படிக்கும் மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கல்லூரி மூடப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாநகராட்சி அறிவுறுத்தலின்படி இந்த நர்சிங் கல்லூரியில், கேராளவை சேர்ந்த மாணவிகளை தனிமைப்படுத்தாமல், பிற மாணவிகளுடன் ஒரே வகுப்பறையில் ஒன்றாக அமர வைத்துள்ளனர். இதனால் அந்த மாணவிகள் மூலம் பிற மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவியது தெரியவந்தது.

இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் கே.ஜி. நர்சிங் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

Next Story