“லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி


“லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி
x
தினத்தந்தி 15 Sep 2021 8:23 PM GMT (Updated: 15 Sep 2021 8:23 PM GMT)

“லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி.

மதுரை,

லஞ்ச வழக்கில் கைதான தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மனுதாரரை போலீசார் கைது செய்தபோது அவரிடம் எந்த பணமும் இல்லை. மனுதாரர் ஒரு பெண் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, “அரசின் அதிகார பொறுப்பில் உள்ள அதிகாரி லஞ்சம் வாங்குவது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல தற்போதைய லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல்படுவதில்லை. அவர்கள் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் நீதிபதி, “மனுதாரர் மீதான வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் அவருக்கு தற்போது ஜாமீன் வழங்க இயலாது” என்று கூறி மனுவை ஒத்திவைத்தார்.

Next Story