மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு பயத்தில் தொடர்ந்து 3 பேர் தற்கொலை: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம் அமைச்சர் தொடங்கி வைத்தார் + "||" + 3 commit suicide following fear of ‘need’ exam: Minister launches mental health counseling center for students

‘நீட்’ தேர்வு பயத்தில் தொடர்ந்து 3 பேர் தற்கொலை: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

‘நீட்’ தேர்வு பயத்தில் தொடர்ந்து 3 பேர் தற்கொலை: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
‘நீட்’ தேர்வு பயத்தில் தொடர்ந்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டநிலையில், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவ தகவல் மற்றும் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

இதற்காக தமிழகம் முழுவதும் 333 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 40 மனநல நிபுணர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க தயார் நிலையில் உள்ளனர்.

19-ந் தேதி தடுப்பூசி முகாம்

முதலில் நீட் தேர்வை 2 முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 1,033 எண்ணிக்கையில் உள்ளன. இந்த 108 ஆம்புலன்சஸ் சேவை தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிறது.

மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதை 19-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக தடுப்பூசி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். 19-ந் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.

48 சதவீதம் பேர்

இந்த முறை 20 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி போட இலக்கு வைத்து இருக்கிறோம். தமிழகத்தில் 52 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 48 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை. இந்தியாவில் அதிக அளவில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழகம்தான். அதுமட்டுமின்றி 2 ஆயிரத்து 623 ஆதரவற்றவர்களுக்கும், 1,754 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எழிலன், மோகன், பிரபாகர் ராஜா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. உத்தரகாண்டில் மழை எச்சரிக்கை; அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை
உத்தரகாண்டில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை நடத்தியுள்ளார்.
3. 2-ம் கட்ட தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
4. அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் சந்திரகலா ஆலோசனை நடத்தினார்.
5. சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு வழிகாட்டு குழு
சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.