6-8 வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை; பள்ளி கல்வி துறை அமைச்சர்


6-8 வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை; பள்ளி கல்வி துறை அமைச்சர்
x
தினத்தந்தி 16 Sep 2021 6:12 AM GMT (Updated: 16 Sep 2021 6:12 AM GMT)

அக்டோபர் முதல் வாரத்தில் 6-8 வரையிலான வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.



சென்னை,


சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று நேரில் சந்தித்து, தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை வழங்கினார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கடந்த 14ந்தேதி நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.  இந்த அறிக்கையின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு எடுத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  அவர்கள், அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளனர் என கூறப்படுகிறது.


Next Story