கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Sep 2021 6:12 AM GMT (Updated: 16 Sep 2021 6:12 AM GMT)

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

'முப்பொழுதும், எப்போழுதும்... பக்திப்பசியோடு வருபவோருக்கு அன்பின் ருசியோடு’ என்ற பெயரில் திருச்செந்தூர் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

3 கோவில்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி முதல் எப்போழுது வேண்டுமானாலும் உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான துவக்க நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்

Next Story